வயலில் வேலை பார்த்த சுகாதார அதிகாரி சுட்டுக்கொலை: பீகாரை உலுக்கும் கொலைகள்

5 hours ago 3

பாட்னா: பீகார் தலைநகர் பாட்னாவில் கடந்த ஒரு வாரமாக சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்து, தொடர் கொலைச் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. கடந்த 4ம் தேதி, பிரபல தொழிலதிபர் கோபால் கெம்கா, மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் உள்ள அவரது வீட்டின் முன்பே சுட்டுக் கொல்லப்பட்டார். அந்த அதிர்ச்சி அடங்குவதற்குள், ராணிதலாப் பகுதியில் மணல் அள்ளும் தொழிலில் ஈடுபட்டு வந்த ஒருவர், கடந்த வியாழக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த நிலையில், தற்போது கிராம சுகாதார அதிகாரியாகப் பணியாற்றி வந்த சுரேந்திர குமார் (50) என்பவர் மர்ம நபரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

முன்னதாக நேற்று மாலை ஷேக்புரா கிராமத்தில் உள்ள தனது வயலில் சுரேந்திர குமார் வேலை செய்து கொண்டிருந்தபோது, துப்பாக்கிச் சத்தம் கேட்டு கிராம மக்கள் அங்கு விரைந்துள்ளனர். அப்போது, குண்டுக்காயங்களுடன் சுரேந்திர குமார் மயங்கிக் கிடந்துள்ளார். உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோதும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு, இந்த கொலைச் சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

The post வயலில் வேலை பார்த்த சுகாதார அதிகாரி சுட்டுக்கொலை: பீகாரை உலுக்கும் கொலைகள் appeared first on Dinakaran.

Read Entire Article