சென்னை: சாலை விபத்தில் வனவர் மற்றும் வனக்காப்பாளர் ஆகிய இருவரும் கர்நாடகா பேருந்து மோதி சம்பவ இடத்தில் இறந்தது பற்றிய வனம் மற்றும் கதர் துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஐகண்ணப்பன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியில் பணிபுரியும் வனவர் கார்த்திகேயன் மற்றும் வனக்காவாளர் திவாகர் ஆகிய இருவரும் 14/05/2025, புதன்கிழமையன்று மாலை 6.20 மணி அளவில் ஊத்தங்கரையில் இருந்து மத்தூர் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது மத்தூர் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட கமலாபுரம் கிராமம் அருகே உள்ள முருகர் கோவில் அருகே தேசிய நெடுஞ்சாலை எண்: 77 ல், பெங்களூரில் இருந்து திருவண்ணாமலை நோக்கி வந்த கர்நாடகா அரசு பேருந்து மோதி வன காவலர் மற்றும் வனவர் இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்ட செய்தியை அறிந்து மிகவும் மன வருந்தம் அடைந்தேன்.
பாதிக்கப்பட்ட வன பணியாளர்கள் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். வனத்துறையில் பணியாற்றும் வனக்காவலர், வனக்காப்பாளர் உட்பட அனைவரும் பணியின் போதும், சாலையில் பயணிக்கும் போதும் மிகவும் எச்சரிக்கையாகவும் பாதுகாப்புடனும் செல்லவேண்டும் от бот அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
The post வனவர் மற்றும் வனக்காப்பாளர் ஆகிய இருவரும் சாலை விபத்தில் உயிரிழப்பு: அமைச்சர் ஆர்.எஸ். ராஐகண்ணப்பன் இரங்கல்! appeared first on Dinakaran.