வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் கூடுதல் ஏசி சேர் கார் பெட்டிகளுடன் இயக்கம்

5 hours ago 1

திருவனந்தபுரம்,

நாகர்கோவில் - சென்னை எழும்பூர் - நாகர்கோவில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் வரும் 8-ம் தேதி முதல் கூடுதல் பெட்டிகளுடன் இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்து உள்ளது. இது தொடர்பாக, திருவனந்தபுரம் கோட்டம் தலைமை அலுவலக செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

ரெயில் எண்கள் 20627/20628 சென்னை எழும்பூர் - நாகர்கோவில் - சென்னை எழும்பூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் தற்போது 16 ஏ சி சேர் கார் பெட்டிகளுடன் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், ரெயில் பயணிகளின் தேவையினை கருத்தில் கொண்டு, வியாழக்கிழமை (8-ம் தேதி ) முதல் இவ்விரு ரெயில்களும் கூடுதலாக 4 பெட்டிகளுடன் மொத்தம் 20 ஏசி சேர் கார் பெட்டிகளுடன் இயக்கப்படும் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும், எடத்துவா புனித ஜார்ஜியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு, நாளையும் (6-ம் தேதி) நாளையும், கன்னியாகுமரி - திப்ருகார் விவேக் எக்ஸ்பிரஸ் ரெயில் (எண். 22503), திப்ருகார் - கன்னியாகுமரி விவேக் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு (எண்.22504) திருவல்லா ரெயில் நிலையத்தில் ஒரு நிமிட தற்காலிக நிறுத்தம் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக அந்த செய்தி குறிப்பில் மேலும் கூறப்பட்டுள்ளது.

Read Entire Article