வத்திராயிருப்பில் அனலை விரட்டிய கோடைமழை மக்கள் மகிழ்ச்சி

4 days ago 4

வத்திராயிருப்பு, மே 15: வத்திராயிருப்பில் பெய்த கோடை மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான கூமாபட்டி, கோபாலபுரம், கான்சாபுரம், மகாராஜபுரம், தம்பிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று அதிகாலை முதல் அக்னி நட்சத்திர வெயிலானது அதிகரித்தே காணப்பட்டது. இதனால் சாலைகளில் பொதுமக்கள் நடமாட்டம் என்பது மிகவும் குறைந்து காணப்பட்டது.

பின்னர் மதிய வேளையில் வெப்பச் சலனம் காரணமாக திடீரென கருமேகம் சூழ்ந்து இடியுடன் கூடிய கனமழை சுமார் அரை மணி நேரத்துக்கு மேலாக பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் ஆங்காங்கே மழை நீரானது ஆறு போல் ஓடியது. திடீரென பெய்த கனமழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

The post வத்திராயிருப்பில் அனலை விரட்டிய கோடைமழை மக்கள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Read Entire Article