சேலம்: கடந்த 8-ம் தேதி முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த அரக்கோணம் - சேலம்- அரக்கோணம் ரயில் சேவை, 12 நாட்களுக்குப் பின்னர் நாளை (20-ம் தேதி) முதல் மீண்டும் தொடங்குகிறது.
சேலம்- அரக்கோணம் இடையே இரு மார்க்கத்திலும் இயக்கப்பட்டு வந்த பயணிகள் ரயிலின் சேவை, கடந்த 8-ம் தேதி முதல் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு, 12 நாட்களாக இயக்கப்படவில்லை. இந்நிலையில், சேலம்- அரக்கோணம் இடையிலான ரயில் சேவை நாளை (20-ம் தேதி) முதல் மீண்டும் தொடங்கும் என்று சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.