கடைகளின் மாத வாடகையை எளிமையாக செலுத்த ‘கியூ ஆர்’ கோடு: மதுரை மாநகராட்சியில் புதிய நடைமுறை

4 hours ago 1

மதுரை: மாநகராட்சி கடைகளுடைய வாடகையை அதன் உரிமையாளர்கள் நிலுவையில்லாமல் உடனுக்குடன் எளிமையாக செலுத்தும் வகையில், மாநகராட்சி நிர்வாகம் கடைகள் முன் ‘கியூ ஆர்’ கோடு ஓட்டி வாடகை வசூல் செய்யும் புதிய நடைமுறை விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

100 வார்டுகளில் மதுரை மாநகராட்சிக்கு சொந்தமான 3,378 கடைகள் உள்ளன. இந்த கடைகளை ஏலம் எடுத்தவர்கள், கடைகளை கால நீட்டிப்பு செய்வதற்கு 3 ஆண்டுக்கு ஒரு முறை மாநகராட்சியில் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். இதற்கு, கடை உரிமையாளர்கள், புதுப்பித்தல் படிவத்தை நிரப்பி, உண்மையான கடை உரிமையாளர்தானா என்பதற்கான ஆதார் கார்டு போன்ற உரிய ஆதாரங்களை சமர்பித்து கடைகளுடைய சதுர அடி அடிப்படையில் குறிப்பிட்ட கட்டணம் செலுத்த வேண்டும்.

Read Entire Article