திருச்சி, ஏப்.26: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் இன்று சித்திரை தேர் திருவிழா கொண்டாடப்பட உள்ள நிலையில் கோயில் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் வீழா முன்னேர்பாடுகள் நடந்து வருகிறது. ஸ்ரீரங்கம், ரங்கநாதர் கோயில் சித்திரை தேர் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகுவிமரிசையாக நடைபெறும். இந்தாண்டு இன்று தேர்திருவிழா நடைபெறுகிறது. இதை முன்னிட்டு தேரை வடம்பிடித்து இழுக்க ஏராளமான பக்தர்கள் வெளியூர், வெளி மாவட்டங்களில் இருந்து ஸ்ரீரங்கத்திற்கு வந்தவண்ணம் உள்ளனர். மேலும் பக்தர்கள் வசதிக்கேற்ப கோயில் நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆங்காங்கே கழிவறை வசதி, குடிநீர் வசதி, அண்ணதான வசதி ஆகியவை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் சிறப்பு பேருந்துகளும் மத்திய பஸ் நிலையம், சத்திரம் பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்பட உள்ளது. கோடை வெயில் அதிகரித்திருப்பதால் ஆங்காங்கே பந்தல்களும் அமைக்கப்பட்டு வருகிறது.
தேரோடும் 4 சித்திரை வீதிகளிலும் திருச்சி மாநகர போலீசாரில் பாதுகாப்பு வளையத்திற்குள் வந்துள்ளது. அதேபோல் பக்தர்கள் தங்கள்கொண்டு வரும் உடமைகள், குழந்தைகளை பத்திரமாக பாதுகாக்க மைக் மூலம் போலீசார் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். சித்திரை தேர் திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் முழுவதும் வண்ணவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு வண்ணஒளியில் ஜொலிக்கிறது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் தாகம் தீர்க்க ஸ்ரீரங்கம் கோயில் நிர்வாகம் சார்பில் கோயிலில் உள்ள முக்கிய வளாகங்களில் ஆங்காங்கே குழாய்கள் அமைக்கப்பட்டு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. சித்திரை தேர் திருவிழாவை முன்னிட்டு கூடுதலாக பல்வேறு பகுதிகளில் பக்தர்கள் தாகம் தீர்க்க சுத்தகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் பக்தர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
The post வண்ணவிளக்குகளால் ஜொலிக்கிறது விழாக்கோலம் பூண்டது ஸ்ரீரங்கம் appeared first on Dinakaran.