வண்டலூர் உயிரியல் பூங்காவில் நீர்யானை குட்டி ஈன்றது: சிசிடிவி கேமரா மூலம் கண்காணிப்பு

1 month ago 6

சென்னை: வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் சிங்கம், புலி, கரடி, யானை, மான்கள் உள்ளிட்ட பல அரிய வகை விலங்குகளும், ஏராளமான பறவைகளும் உள்ளன. குறிப்பாக, 5 பெண் நீர்யானைகளும், 2 ஆண் நீர் யானைகளும் என மொத்தம் 7 நீர் யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பிரக்ஷ்குர்தி என்ற பெண் நீர்யானை 8 மாதம் கர்ப்பமாக இருந்தநிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 21ம் தேதி குட்டியானையை ஈன்றது.

அப்போது தாயும், குட்டியும் தனித்தனியாக பராமரிக்கப்பட்டு வந்த நிலையில் பிறந்த 8வது நாளில் குட்டி மர்மமான முறையில் இறந்தது. இதனால் நீர்யானை உலாவிடம் மூடி வைக்கப்பட்டன. இந்நிலையில், பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த மற்றொரு பெண் நீர்யானை நேற்று முன்தினம் ஒரு குட்டி நீர்யானையை ஈன்றது. இதனை பூங்கா நிர்வாகத்தினர் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணித்து வருகின்றனர். இதுகுறித்து பூங்கா நிர்வாகத்திடம் கேட்டதற்கு பதில் கூற மறுத்து விட்டனர்.

 

The post வண்டலூர் உயிரியல் பூங்காவில் நீர்யானை குட்டி ஈன்றது: சிசிடிவி கேமரா மூலம் கண்காணிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article