அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் பிப்ரவரி 8ம் தேதி குரூப்-2 தேர்வு

3 hours ago 2

திருச்சி, பிப்.6: தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகளுக்கான தேர்வு தொகுதி-IIல் (குரூப்-2) அடங்கிய பல்வேறு பதவிகளுக்கான முதன்மைத் தேர்வு வரும் பிப்.8 அன்று காலை மற்றும் மதிய வேளைகளில் நடைபெறும் என மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டத்தில் 3 தேர்வு மையங்களில் 789 தேர்வர்கள் இத்தேர்வை எழுதவுள்ளனர். இத்தேர்வு பணிகளுக்கென 3 தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தேர்வு வினாத்தாள் மற்றும் விடைத்தாள் உள்ளிட்ட தேர்வு பொருட்களை தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்லும் பணியை செய்ய ஒரு ‘இயங்கு குழு’ அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் துணை தாசில்தார் நிலையில் உள்ள ஒரு அலுவலர், துப்பாக்கி ஏந்திய போலீஸ் ஒருவர் இருப்பர்.

அனைத்து தேர்வு மையங்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்வர்கள் தேர்வு மையங்களுக்கு சென்று வர சிறப்பு பஸ் இயக்கப்படுகிறது. தேர்வர்கள் செல்போன், புளூடூத், டிஜிட்டல் வாட்ச் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை தேர்வு மையங்களுக்கு எடுத்துவர அனுமதி இல்லை என்றும், காலை 9 மணிக்கு பின்னர் தேர்வு மையத்திற்கு வரும் தேர்வர்கள் எக்காரணம் கொண்டும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளதாக திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் தொிவித்துள்ளார்.

The post அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் பிப்ரவரி 8ம் தேதி குரூப்-2 தேர்வு appeared first on Dinakaran.

Read Entire Article