ஆரணி, மே 15: ஜம்மு காஷ்மீர் பஹல்காம் தாக்குதல் கண்டித்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி வெற்றி பெற்ற இந்திய ராணுவத்தை பாராட்டும் வகையில் ஆரணியில் அனைத்து வணிகர் சங்கத்தினர் சார்பில் தேசியக்கொடியை ஏந்தி வெற்றி பேரணி நேற்று நடந்தது. ட்டை மைதானம் அருகில் உள்ள கார்கில் நினைவு தூண் அருகில் பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்த பொதுமக்கள், ராணுவ வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி வெற்றி பேரணியை தொடங்கி வைத்தனர். பின்னர், பேரணி ஆரணி பழைய பஸ் நிலையம், காந்தி சாலை வழியாக அண்ணா சிலை வரை நடந்தது. அப்போது, வணிகர்கள் இந்திய ராணுவத்தை பாராட்டி கோஷங்கள் எழுப்பியபடி சென்றனர்.
The post வணிகர்கள் தேசியக்கொடி ஏந்தி பேரணி இந்திய ராணுவத்தை பாராட்டி appeared first on Dinakaran.