மதுரை: “திமுக அரசு வணிகர்களின் வளர்ச்சிக்கு எப்போதும் உறுதுணையாக இருக்கும்” என்று மதுரையில் நடந்த தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் 100-ம் ஆண்டு நிறைவு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
மதுரையில் இன்று (ஜன.22) தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் 100-ம் ஆண்டு நிறைவு விழா சங்கத்தின் தலைவர் என்.ஜெகதீசன் தலைமையில் நடைபெற்றது. சங்கத்தின் செயலாளர் எஸ்.ஸ்ரீதர் முன்னிலை வகித்தார். இவ்விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியது: “தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் பவள விழாவில் அன்றைய முதல்வர் கருணாநிதி பங்கேற்றார். கருணாநிதியின் பிறந்த ஆண்டும், இந்த அமைப்பு உருவான ஆண்டும் ஒரே ஆண்டுதான்.