வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.61.50 அதிகரித்து 1964.50 ரூபாய்க்கு விற்பனை: வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமில்லை

2 weeks ago 6

சென்னை: வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.61.50 அதிகரித்து 1964.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.61.50 உயர்ந்து விற்பனையாகிறது; வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமில்லாமல் 818.50 ரூபாயாக நீடிக்கிறது.
பொதுத்துறையைச் சேர்ந்த இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் எண்ணெய் நிறுவனங்கள் வீடுகளுக்கு, 14.20 கிலோ எடையிலும், வணிக பயன்பாட்டிற்கு, 19 கிலோ எடையிலும் சமையல் காஸ் சிலிண்டர்களை வினியோகம் செய்கின்றன.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப, உள்நாட்டில் மாதந்தோறும் முதல் நாளன்று, சமையல் காஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படுகிறது. தமிழகத்தில், வீட்டு சிலிண்டர் கடந்த மாதம், 818.50 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இம்மாதம், அதன் விலை மாற்றம் செய்யப்படாமல், அதே விலையே நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. கடந்த மாதம் 1,903 ரூபாய்க்கு விற்கப்பட்ட வணிக காஸ் சிலிண்டர் விலை, இம்மாதம், ரூ.61.50 உயர்ந்து, 1964.50 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து 4 மாதங்களாக, வணிக சிலிண்டர் விலை உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

The post வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.61.50 அதிகரித்து 1964.50 ரூபாய்க்கு விற்பனை: வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமில்லை appeared first on Dinakaran.

Read Entire Article