வடமதுரை அருகே சாலை மறியல்

2 months ago 8

வடமதுரை, பிப். 20: வடமதுரை அருகே பிலாத்து ஊராட்சிக்குட்பட்ட வாலிசெட்டிபட்டியில் கிராம வறுமை ஒழிப்பு சங்க அலுவலக கட்டிடம் உள்ளது. இதில் அங்கன்வாடி மையம், புதுவாழ்வு திட்ட அலுவலகம், ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. இந்த ரேஷன் கடையில் 200 குடும்ப அட்டைதாரர்கள் பொருட்கள் வாங்கி வருகின்றனர். இந்நிலையில் சேவை மைய கட்டிடத்திற்கு மின் கட்டணம் செலுத்தாததால் மின்வாரிய துறையினர் மின் இணைப்பை துண்டித்தனர். மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் பதிவு இயந்திரத்தை இயக்க முடியாமல் ரேஷன் கடையை ஊழியர்கள் பூட்டி சென்றனர்.

இந்நிலையில் நேற்று ரேஷன் கடையில் பொருட்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் பொருட்கள் வாங்க காலை முதலே ரேஷன் கடை முன்பு காத்திருந்த பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர். எனவே தங்கள் ஊருக்கு தனி ரேஷன் கடை கட்டிடம் கட்டி தர வேண்டும் என வலியுறுத்தி கிராமமக்கள் பிலாத்து- கொம்பேறிபட்டி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

The post வடமதுரை அருகே சாலை மறியல் appeared first on Dinakaran.

Read Entire Article