மன்னார்குடி,பிப்.22: மளிகைக்கடையில் குட்கா விற்றவரை போலீசார் கைது செய்தனர்.வடபாதிமங்கலம் காவல் சரகத்திற்கு உட்பட்ட புனவாசல் மெயின் ரோட்டில் ஒரு பெட்டிக்கடையில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்வதை எஸ் ஐ சேகர், எஸ்எஸ்ஐ கிருஷ்ணகுமார், தனிப் பிரிவு பிரபாகரன் அடங்கிய குழுவினர் நடத்திய அதிரடி சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக கடையின் உரிமையாளர் பஷீர் அகமது (33) மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். கடடியில் இருந்து 12 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.
The post வடபாதிமங்கலம் அருகே குட்கா விற்றவர் கைது: 12 கிலோ பறிமுதல் appeared first on Dinakaran.