அமெரிக்காவின் 250-வது சுதந்திர தினக் கொண்டாட்டம்: ராணுவ மரியாதையை ஏற்றார் அதிபர் டொனால்டு டிரம்ப்..!!

4 hours ago 4

வாஷிங்டன்:  அமெரிக்கா முழுவதுமாக 250வது சுதந்திரம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. வெள்ளை மாளிகையில் நடைபெற்ற வாணவேடிக்கைகளை அதிபர் டொனால்டு டிரம்பும், அவரது மனைவி மெலனியாவும் கண்டு ரசித்தனர். அமெரிக்கா சுதந்திரத்தினையொட்டி வெள்ளை மாளிகையில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. 250வது சுதந்திரத்தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக வெள்ளை மாளிகை மீது அமெரிக்கா ராணுவத்தின் பி2 மட்டும் எப்35 ரக போர் விமானங்கள் தாழ்வாக பறந்தன.

வெள்ளை மாளிகையின் மடத்தில் இருந்து இதனை மனைவி மெலனியாவுடன் பார்வையிட்ட அதிபர் டிரம்ப் ராணுவ மரியாதையை ஏற்றுக்கொண்டார். இதையடுத்து இரவை பகலாக்கும் வகையில் வண்ணமயமாக நடைபெற்ற வாணவேடிக்கைகளை அதிபர் டொனால்டு டிரம்பும், மெலனியா டிரம்பும் கண்டு ரசித்தனர். சுதந்திர தினம் கொண்டாட்டங்கள் பல்வேறு மாநிலங்களிலும் களைகட்டி இருந்தது. நியூயார்க் நகரத்தில் நடைபெற்ற வாணவேடிக்கைகள் மற்றும் வண்ண விளக்கு பொருத்தப்பட்ட டிரோன் ஜாலங்கள் பார்வையாளர்களை மெய்சிலிர்க்க செய்தது.

The post அமெரிக்காவின் 250-வது சுதந்திர தினக் கொண்டாட்டம்: ராணுவ மரியாதையை ஏற்றார் அதிபர் டொனால்டு டிரம்ப்..!! appeared first on Dinakaran.

Read Entire Article