வடநெம்மேலியில் இன்று சர்வதேச புரோ பீச் வாலிபால் போட்டி: துணை முதல்வர் தொடங்கி வைக்கிறார்

1 month ago 5

சென்னை, நவ.21: மாமல்லபுரம் அடுத்த வடநெம்மேலியில் உள்ள இன்டர்கான்டினென்டல் தனியார் ரிசார்ட்டையொட்டி உள்ள கடற்கரையில், 13 ஆண்டுகளுக்குப் பிறகு, சர்வதேச புரோ பீச் வாலிபால் போட்டி இன்று (21ம் தேதி) தொடங்கி 24ம் தேதி வரை தொடர்ந்து 4 நாட்கள் நடைபெற உள்ளது. இதில், 40 நாடுகளைச் சேர்ந்த ஆண்கள் பிரிவில் 24 அணிகள், பெண்கள் பிரிவில் 24 அணிகள் என மொத்தம் 48 அணிகள் கலந்துகொள்கின்றன. 300க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இன்று, மாலை 6 மணிக்கு தொடங்கும் சர்வதேச புரோ பீச் வாலிபால் போட்டியை தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

The post வடநெம்மேலியில் இன்று சர்வதேச புரோ பீச் வாலிபால் போட்டி: துணை முதல்வர் தொடங்கி வைக்கிறார் appeared first on Dinakaran.

Read Entire Article