வடசென்னையின் வளர்ச்சிக்காக ரூ.1000 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடந்து வருகின்றன: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேட்டி

2 hours ago 1

சென்னை: வடசென்னையின் வளர்ச்சிக்காக ரூ.1000 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடந்து வருகின்றன என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கொளத்தூர் பகுதியில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு செய்தார். அப்போது அவருடன் அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா உள்ளிட்டோர் உடனிருந்தனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திரு.வி.க. நகர் கன்னிகாபுரம் விளையாட்டு மைதான பணிகளை நேரில் பார்வையிட்டார். கணேசபுரம் மேம்பால பணி, 776 புதிய குடியிருப்பு கட்டுமானப் பணி, தண்டையார்பேட்டை பேருந்து நிலைய பணி பார்வையிட்டு வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ், கன்னிகாபுரம் பகுதியில், சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் சார்பில் ரூ.44.15 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படவுள்ள பணிகள் மற்றும் TNUHDB குடியிருப்புகளுக்கு குடிநீர் குழாய் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். கொளத்தூர் தொகுதியில் ஆய்வு மேற்கொண்ட பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பில் பேசியதாவது,

வடசென்னை வளர்ச்சிக்காக ரூ.1000 கோடியில் பணிகள்

வடசென்னையின் வளர்ச்சிக்காக ரூ.1000 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடந்து வருகின்றன. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு சென்னை நகரின் வளர்ச்சிக்காக பல்வேறு பணிகளை செய்துள்ளோம். ஓராண்டு காலத்தில் அனைத்து பணிகளையும் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னை நகரின் வளர்ச்சிக்காக பல்வேறு பணிகள்

திமுக ஆட்சிக்கு வந்தபிறகு பல்வேறு பணிகளை சென்னைக்கு செய்து வருகிறோம்.

அரசுக்கு எதிராக ஆளுநர் செயல்படுகிறார்

எல்லா பிரச்சனைகளிலும் அரசுக்கு எதிராக ஆளுநர் செயல்படுகிறார் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றசாட்டு வைத்தார். ஆளுநர் தொடர்ந்து அரசுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். ஆளுநரின் செயல்பாடுகள் அரசுக்கு சிறப்புதான் சேர்க்கிறது, ஆளுநர் தொடர்ந்து அப்படியே செயல்பட்டு வரட்டும்.

வடசென்னை வளர்ந்த சென்னையாக ஓராண்டுக்குள் மாறும்

வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் மொத்தம் 252 பணிகள் நடைபெற்று வருகின்றன. வடசென்னை வளர்ந்த சென்னையாக ஓராண்டுக்குள் மாறும். ரூ.6,350 கோடியில் வடசென்னை வளர்ச்சி திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு குற்றச்சாட்டு

தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக உள்ளது; எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றன. பெரியாரை மரியாதை குறைவாக பேசுபவர்களுக்கு மரியாதை அளிக்க தயாராக இல்லை

The post வடசென்னையின் வளர்ச்சிக்காக ரூ.1000 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடந்து வருகின்றன: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேட்டி appeared first on Dinakaran.

Read Entire Article