சென்னை: வடசென்னை பகுதியில் நிறுத்தப்பட்ட பேருந்து சேவைகளை மீண்டும் தொடங்க கோரி போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கருக்கு கலாநிதி வீராசாமி எம்.பி. கடிதம் அனுப்பியுள்ளார்.
கடிதத்தில் அவர் கூறியுள்ளதாவது: கரோனா பெருந்தொற்று காலத்துக்கு முன்பு மணலி புதுநகர் பகுதியில் இருந்து 28-ஏ, 121-டி, 56-ஜே ஆகிய வழித்தட எண்களை கொண்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. வேலைக்கு செல்லும் பொதுமக்கள், மருத்துவமனைகளுக்கு செல்வோர் உட்பட அத்தியாவசிய பயணம் மேற்கொள்ளும் அனைவருக்கும் இது வசதியாக இருந்தது.