சென்னை: போப் ஆண்டவர் பிரான்சிஸ் உடல்நலக்குறைவால் மறைந்தார் என்ற செய்தி துக்கத்தை தருகிறது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார். “சாதி மதங்களால் எந்த ரத்தக்களறியும் ஏற்படக்கூடாது என்று அருள்மொழி வழங்கியவர் போப் ஆண்டவர். அருள்மொழி வழங்கிய போப்பரசர் மறைவு அனைத்து தரப்பினரை துயரத்தில் ஆழ்த்தி உள்ளது. துயர் நிறைந்த ஆழ்ந்த இரங்கலை மதிமுக சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்” என வைகோ தெரிவித்துள்ளார்.
The post போப் ஆண்டவர் பிரான்சிஸ் உடல்நலக்குறைவால் மறைந்தார் என்ற செய்தி துக்கத்தை தருகிறது: வைகோ இரங்கல் appeared first on Dinakaran.