வரலாற்றில் புதிய உச்சம்; தங்கம் ஒரு பவுன் ரூ.72,120க்கு விற்பனை: 4 மாதத்தில் ரூ.15,000 அதிகரிப்பு

4 hours ago 3

சென்னை: வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.72,120 ஆக உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. சர்வதேச அளவில் நிலவும் பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் காரணமாக ஆபரணத் தங்கத்தின் விலையில் மாற்றம் நிகழ்கிறது.

தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகமாக உள்ளது. இந்தாண்டு தொடக்கம் முதலே தங்கத்தின் மீதான விலை ஏற்றத்துடன் காணப்பட்டு வருகின்றது. கடந்த ஜனவரி 1ம் தேதி ஒரு பவுன் ரூ.57,200க்கு விற்பனை செய்யப்பட்டது. இதன் பின்னர், பிப்ரவரி தொடக்கத்தில் பவுன் விலை ரூ.61,960-க்கு உயர்ந்தது. தொடர்ந்து கடந்த மார்ச் 1ம் தேதி ரூ.63,520-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனையடுத்து இம்மாதம் தொடக்கத்தில் ரூ.68,080-க்கு விற்பனையாகி வந்தது.

இந்தநிலையில் கடந்த மூன்று நாட்களாக ரூ.71,560-க்கு தங்கம் விலையில் மாற்றமின்றி இருந்த நிலையில் இன்றைய தினம் ரூ.72 ஆயிரத்தை கடந்துள்ளது. அதன்படி, வரலாற்றிலேயே இல்லாத வகையில் புதிய உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலையானது கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரை அதாவது, 4 மாதங்களில் ரூ.15,000 ஆயிரம் வரை அதிகரித்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ. 70 உயர்ந்து, ரூ.9,015க்கும், சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.72,120-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்ந்து வெள்ளி விலையில் மாற்றமில்லாமல் ஒரு கிராம்ரூ.110க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.1,10,000க்கும் விற்பனையாகிறது. இந்த கிடு, கிடு விலை உயர்வால் நகை வாங்குவோர் மத்தியில் அதிர்ச்சியும், கலக்கமும் அடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

The post வரலாற்றில் புதிய உச்சம்; தங்கம் ஒரு பவுன் ரூ.72,120க்கு விற்பனை: 4 மாதத்தில் ரூ.15,000 அதிகரிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article