மாஸ்கோ: ரஷ்யாவுக்கும் வட கொரியாவுக்கும் இடையே உறவுகள் வளர்ச்சி அடைந்து வருகிறது. வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் ரஷ்யாவில் சுற்றுபயணம் செய்து அதிபர் புடினை சந்தித்து பேசினார். உக்ரைனை எதிர்த்து போரிடும் ரஷ்யாவுக்கு வட கொரியா ராணுவ வீரர்களை அனுப்பி வைத்துள்ளதாக தென் கொரிய உளவு துறை தகவல் வெளியிட்டு வந்தது. ரஷ்யாவுக்கு ஆதரவாக போரிட்டதில் வடகொரிய வீரர்கள் 4700 பேர் உயிரிழந்தனர் அல்லது காயமடைந்தனர் என கூறப்படுகிறது. ரஷ்யாவுக்காக தியாகம் செய்த வட கொரிய வீரர்களை பாராட்டுவதாக புடினும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே ஓடும் டுமென் ஆற்றின் குறுக்கே 1 கிமீ நீளத்துக்கு புதிய பாலம் கட்டுமான பணி தொடங்கியுள்ளது. இந்த பாலம் ஒன்றரை வருடங்களுக்குள் கட்டி முடிக்கப்படும். அதன் பிறகு இரு நாடுகளுக்கும் இடையே போக்குவரத்து, சுற்றுலா மற்றும் பொருள் போக்குவரத்து அதிகரிக்கும் என்று ரஷ்ய பிரதமர் மிகைல் மிஷூஸ்டின் கூறியதாக ரஷ்ய செய்தி நிறுவனம் டாஸ் தெரிவித்தது.
The post வடகொரியா-ரஷ்யா இடையே பாலம் கட்டுமான பணி தொடக்கம் appeared first on Dinakaran.