போராட்டங்களால் மட்டுமே பெண்களுக்கான நீதி கிடைக்கும் என்ற நிலை இருக்கக் கூடாது: தமிழிசை வலியுறுத்தல்

3 hours ago 2

சென்னை: தமிழகத்தில் போராட்டங்களினால் மட்டுமே பெண்களுக்கான நீதி கிடைக்கும் என்ற நிலை இருக்கக் கூடாது என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

பாஜக மாநில முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது: அரக்கோணத்தை சேர்ந்த ஒரு பெண் கடந்த 9-ம் தேதியில் இருந்து பரிதவித்துக் கொண்டிருக்கிறார். திமுக இளைஞரணியைச் சேர்ந்த ஒருவர் தன்னை திருமணம் செய்து கொண்டு, பலருக்கு தன்னை விருந்தாக்க முயற்சி செய்வது மட்டுமல்லாமல், பெண்களை வைத்து இதேபோல பல கொடூரமான முயற்சிகளை செய்து கொண்டிருக்கிறார் என்றும், ஏறக்குறைய 20 பெண்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அந்தப் பெண் குற்றம்சாட்டி உள்ளார்.

Read Entire Article