வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: மக்கள் அச்சமடைய வேண்டாம்- உதகை ஆட்சியர்

2 months ago 14

உதகை: வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்து முன்னேற்பாடுகளுடன் தயார் நிலையில் உள்ளதால் பொதுமக்கள் எவ்வித அச்சமும் அடைய வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது: வடகிழக்கு பருவமழை காரணமாக நேற்று முன்தினம் பெய்த கனமழையில் வெலிங்டன் ரவுண்டானா அருகில் சென்று கொண்டிருந்த போது காரின் மீது மரம் விழுந்ததில் ஜாகீர் உசேன் என்பவர் உயிரிழந்தார். குன்னூர், மேல் பாரத் நகரில் வசித்து வரும். ஜெபமாலை மேரி என்பவரன் வீட்டின் இடிந்து விழுந்ததில் ஜெபமாலை மேரிக்கு தலையில் காயம் ஏற்பட்டு குன்னூர் லாலி அரசு மருத்துவ மனையில் முதலுதவி சிகிச்கை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக உதகை அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Read Entire Article