வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது - அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்

3 months ago 22

சென்னை,

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைதுறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையானது இயல்பை விட அதிகமாக பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

பருவமழையை எதிர்கொள்ள அனைத்து துறை அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்த நிலையில், மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் ஆய்வு செய்த பின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பேட்டி செய்தியார்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது.

வரும் 15,16 மற்றூம் 17 ஆகிய தேதிகளில் சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களுக்கு அதிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள முதல்-அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

தேசிய பேரிடர் மீட்பு படையினரும் தயாராக உள்ளனர்; பால், குடிநீர், உள்ளிட்ட உணவுப் பொருட்களை மழைக்கு முன்பாகவே தயாராக வைக்க அறிவுறித்தியுள்ளோம். பொதுமக்களுக்கு உதவ தமிழ்நாடு முழுவதும் 60,000-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் தயார் நிலையில் உள்ளனர்;

நீர்வளத்துறை மூலம் நீர் நிலைகளை கவனித்து வருகிறோம். மாநில அவசர கால செயல்பாட்டு மையம் 24 மணி நேரமும் செயல்படும் பொதுமக்களும் எந்த நேரமும் தொடர்பு கொண்டு தங்கள் புகார்களை தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article