பள்ளி மாணவியிடம் சில்மிஷம்; தலைமை ஆசிரியர் கைது

4 hours ago 3

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் படிக்கும் 10 வயதுடைய 5-ம் வகுப்பு மாணவி மாலை பள்ளி முடிந்து வீட்டுக்கு சென்றார். அப்போது மாணவி வீட்டில் சோகமாக இருந்துள்ளார். மறுநாள் பள்ளிக்கு செல்ல மாட்டேன் என்று மாணவி, தனது தாயாரிடம் கூறியுள்ளார். ஏன் என்று கேட்டதற்கு பள்ளி தலைமை ஆசிரியர் சாரதி, தன்னை தனியாக அழைத்து சென்று சில்மிஷம் செய்ததாக கூறினார். மேலும் தலைமை ஆசிரியர் மூக்கு மீது அடித்ததில் ரத்தம் வந்ததாகவும் மாணவி கூறியுள்ளார்.

இது குறித்து சிறுமியின் தாயார் நேற்று தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி, மாணவியிடம் விசாரணை நடத்தினார். அப்போது தலைமை ஆசிரியர் சிறுமியை கிள்ளி சில்மிஷம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமை ஆசிரியரை கைது செய்தனர். 

Read Entire Article