வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட பயிர்கள் கணக்கெடுக்கும் பணி தீவிரம்

4 weeks ago 4

 

தா.பழூர், டிச. 21: வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது. அரியலூர் மாவட்டம் தா.பழூர் வேளாண் வட்டாரத்தில் நடப்பு பருவத்தில் 12.12.2024 மற்றும் 13.12.2024 அன்று பெய்த வடகிழக்கு பருவமழையின் தீவிரம் காரணமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களை, வேளாண் உதவி அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்களுடன் இணைந்து, பயிர் பாதிப்பு விபரங்களை ஆய்வு செய்து வருகின்றனர். ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள தொடர்பு விவசாயிகள் மூலமும், நேரடியாக வயலினை விவசாயிகளுடன் ஆய்வு செய்தும், பயிர் பாதிப்பு நிலையினை கண்காணித்து வருகின்றனர்.

காரைக்குறிச்சி மற்றும் காசாங்கோட்டை கிராமத்தில் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிலக்கடலை வயல்களை கணக்கெடுக்கும் விபரங்களை வேளாண்மைத்துறையின் வேளாண் உதவி இயக்குநர்(பொ.) திரு.தமிழ்மணி, வருவாய்த்துறையின் ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் சம்பத், தா.பழூர் வருவாய் ஆய்வாளர் சிவநேசன், துணை வேளாண்மை அலுவலர் ராஜதுரை, வேளாண்மை உதவி அலுவலர்கள் தினேஷ், அசோக்குமார் மற்றும் புள்ளியல்துறை அலுவலர் தேவி , கிராம நிர்வாக அலுவலர்கள் பரணிகுமார், கனகராஜ் ஆகியோர் நேரடியாக பார்வையிட்டு பயிர் பாதிப்பு கணக்கெடுக்கும் பணியினை ஆய்வு செய்தனர்.

The post வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட பயிர்கள் கணக்கெடுக்கும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Read Entire Article