வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை வாய்கால்கள் தூர்வாரும் பணி

3 months ago 19

 

மயிலாடுதுறை,அக்.16:வட கிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வாய்க்கால்கள் தூர்வாரும் பணி நடந்தது. மயிலாடுதுறை மாவட்டம் சுற்றுப்பகுதியில் வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ள காரணத்தால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் டெல்டா மாவட்டமான மயிலாடுதுறை மாவட்டத்தில் நள்ளிரவு முதலே பல்வேறு பகுதிகளில் பரவலாக சாரல் மழை மற்றும் தூறல் மழை பெய்து வந்தது. அதனை தொடர்ந்து மயிலாடுதுறையில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நகராட்சி சார்பில் 36 வார்டுகளிலும் உள்ள வடிகால் வாய்க்கால்கள், குப்பைகள் ஜேசிபி இயந்திரம் மூலம் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிகளை நகர மன்ற தலைவர் செல்வராஜ், நகராட்சி ஆணையர் சங்கர், நகர மன்ற உறுப்பினர்கள் நடைபெற்று வரும் பணிகளை பார்வையிட்டனர்.

The post வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை வாய்கால்கள் தூர்வாரும் பணி appeared first on Dinakaran.

Read Entire Article