வைகை அணையில் இருந்து தண்ணீரினை திறந்து விட அனுமதி அளித்து அரசு ஆணை

3 months ago 13

சென்னை: மதுரை, சிவகங்கை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் வைகை பங்கீட்டு நீரின் மூலம் பயன்பெறும் பூர்வீக பாசன பகுதிகளுக்கு தண்ணீர் தேவை பூர்த்தி செய்யப்பட்ட நிலையில், தற்பொழுது வைகை அணையில் 31.01.2025 அன்று உள்ள நீர் இருப்பில், வைகை பங்கீட்டு நீர் அளவான 2752.24 மி.க.அடியை கருத்தில் கொண்டு நிலையூர் நீட்டிப்பு கால்வாய் பகுதியில் உள்ள 94 கண்மாய்களின் நீர் பிடிப்பு பகுதிகளில் உள்ள கால்நடைகளுக்கும் மற்றும் அவ்விடம் வசிக்கும் மக்களுக்கும் கூடுதல் குடிநீர் ஆதாரம் கிடைக்கும் வகையில் நடப்பாண்டின் சிறப்பு நிகழ்வாக வரும் 06.02.2025 முதல் 15.02.2025 வரை 10 நாட்களுக்கு விநாடிக்கு 300 கன அடி வீதம் வைகை அணையில் இருந்து தண்ணீரினை திறந்து விட அனுமதி அளித்து அரசு ஆணையிட்டுள்ளது.

The post வைகை அணையில் இருந்து தண்ணீரினை திறந்து விட அனுமதி அளித்து அரசு ஆணை appeared first on Dinakaran.

Read Entire Article