வசூலில் சந்தானத்தை பின்னுக்கு தள்ளிய சூரி

3 hours ago 3

சென்னை,

கடந்த வாரம் 16-ந் தேதி (வெள்ளிக்கிழமை) பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படம் வெளியானது. மேலும் அதே தேதியில், பிரசாந்த பாண்டிராஜ் இயக்கத்தில் சூரி நடிப்பில் 'மாமன்' திரைப்படமும் வெளியானது.

இதில் டிடி நெக்ஸ்ட் லெவல் படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருவதாக கூறப்படுகிறது. ஆனால் குடும்பக் கதைக்களத்தில் உருவான 'மாமன்' படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த நிலையில், சூரியின் மாமன் மற்றும் சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல் ஆகிய இரண்டு திரைப்படங்களும் 5 நாட்களில் உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, டிடி நெக்ஸ்ட் லெவல் படம் உலகளவில் ரூ. 11 கோடியும், மாமன் திரைப்படம் உலகளவில் ரூ. 13 கோடியும் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில் நடிகர் சந்தானத்தின் பட வசூலை பின்னுக்கு தள்ளி சூரியின் படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Read Entire Article