பாஜக ஆட்சியில் மக்கள் பணம் செல்வந்தர்களிடம் குவிகிறது- ராகுல் காந்தி குற்றச்சாட்டு

4 hours ago 4

rபெங்களூரு,

கர்நாடகத்தில் முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைந்து 2 ஆண்டுகள் ஆகிறது.இதையொட்டி காங்கிரஸ் அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் விஜயநகர் மாவட்டம் ஒசப்பேட்டேயில் நேற்று நடைபெற்றது. இதில் நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசியதாவது:- கர்நாடகத்தில் உள்ள ஏழை மக்களின் பாக்கெட்டுகளில் பணத்தை போடுகிறோம். இன்று ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் ஏழை மக்களின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படுகிறது.

இந்த பணத்தை நீங்கள் கல்வி, சுகாதாரத்திற்கு பயன்படுத்துகிறீர்கள். இதை தான் நாங்கள் விரும்புகிறோம். உங்களின் பணம் மீண்டும் உங்களின் பாக்கெட்டிற்கே வருகிறது. இந்தியாவின் ஒட்டுமொத்த பணமும் சில குறிப்பிட்ட நபர்களுக்கு பா.ஜனதா வழங்குகிறது. நாங்கள் உங்களின் பாக்கெட்டில் செலுத்தும் பணம் மார்க்கெட்டிற்கு செல்கிறது. இதனால் உற்பத்தி அதிகரிக்கிறது. இந்த பணத்தை நீங்கள் கிராமங்களில் செலவு செய்வதால் கிராமப்புறங்களில் பணப்புழக்கம் அதிகரிக்கிறது. கிராமங்களிலும், நகரங்களிலும் இந்த பணம் செலவு செய்யப்படுவதால், கர்நாடகத்தின் பொருளாதாரம் வளர்ச்சி அடைகிறது.

பா.ஜனதா மாடலில் நாட்டின் மொத்த பணமும் 2, 3 பணக்காரர்களிடம் குவிகிறது. இந்த பணக்காரர்கள் கிராமங்களிலோ அல்லது நகரங்களிலோ பணத்தை செலவு செய்வது இல்லை. ஆனால் அவர்கள் இந்த பணத்தை கொண்டு லண்டன், நியூயார்க் உள்ளிட்ட பிற நகரங்களில் சொத்துக்களை வாங்குகிறார்கள். பா.ஜனதா மாடலில் மக்களின் பணம் சில குறிப்பிட்ட பணக்காரர்களுக்கு செல்கிறது" இவ்வாறு அவர் பேசினார்.

Read Entire Article