
தருமபுரி,
கர்நாடகா காவிரி நீர்ப்பிடிப்பு பகுதி மற்றும் கர்நாடகா மாநிலம், மைசூர், மாண்டியா மாவட்டங்கள், சாம்ராஜ் நகர் ஆகிய பகுதிகளில் கடந்த இரு தினங்களாக விடிய விடிய கனமழை பெய்துள்ளது. இதனால் தருமபுரி மாவ ட்டம், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கர்நா டகா, தமிழக காவிரி நீர்ப்பி டிப்பு பகுதிகளான அஞ் செட்டி, கேரட்டி, நாட்றாம் பாளையம், ராசிமணல், பிலிகுண்டுலு, ஒகேனக்கல் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்துள்ளது.
நேற்று மாலை 5 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்றுகாலை 8 மணி நிலவரப்படி 8 ஆயிரம் கனஅடியாக அதிகரித்து வந்தது. இதனால் காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. நீர்வரத்து அதி கரித்து ள்ளதால் ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ், ஐவர்பாணி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் பரிசல் பயணம் மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர். மேலும் தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றில் விழும் தண்ணீரை ஆர்வமுடன் ரசித்து மகிழ்ந்தனர். பின்னர் அவர்கள் மெயின் அருவியில் குளி த்தும், பெண்கள் காவிரி ஆற்றில் குளித்தும் மகிழ்ந்த னர்.