வங்கி அதிகாரிக்கு 3 ஆண்டு சிறை

3 months ago 17

 

மதுரை, அக். 17: மதுரை அண்ணாநகர் பகுதியில் உள்ள அரசுடமை வங்கியில் துணை மேலாளராக இருந்தவர் செல்வராஜ். இந்த வங்கியில் சங்கமகேஸ்வரன் என்பவர் நடப்பு கணக்கு துவங்கிய 20 நாட்களில் விதிகளை மீறி கடன் வழங்கி, வங்கிக்கு ரூ.65 லட்சத்து 25 ஆயிரத்து 92க்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக, செல்வராஜ், சங்கமகேஸ்வரன் ஆகியோர் மீது சிபிஐ லஞ்ச ஒழிப்பு போலீசார் 2005ல் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கின் விசாரணை மதுரை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. இருதரப்பு வாதங்கள் முடிந்த நிலையில், துணை மேலாளர் செல்வராஜ் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி சண்முகவேல் நேற்று தீர்ப்பளித்தார். வழக்கில் சங்கமகேஸ்வரன் விடுவிக்கப்பட்டார்.

The post வங்கி அதிகாரிக்கு 3 ஆண்டு சிறை appeared first on Dinakaran.

Read Entire Article