வங்காளதேசத்திற்கு எதிரான வெற்றி.. 10 வருட கால சோகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த தென் ஆப்பிரிக்கா

3 months ago 15

மிர்புர்,

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் மிர்புரில் கடந்த 21-ம் தேதி தொடங்கிய முதலாவது டெஸ்ட் போட்டி இன்று முடிவடைந்தது.

இதில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

மேலும் இந்த வெற்றியின் மூலம் ஆசிய மண்ணில் கடந்த 10 ஆண்டுகளாக டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதில்லை என்ற நீண்ட கால சோகத்திற்கு தென் ஆப்பிரிக்கா முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

Read Entire Article