மேலும் குறைந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன..?

6 hours ago 4

சென்னை,

தங்கம் விலை இந்த மாத தொடக்கத்தில் இருந்தே தொடர்ந்து ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. நேற்று முன் தினம் ஒரு கிராம் ரூ.85-ம், ஒரு பவுன் ரூ.680-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.9 ஆயிரத்து 70-க்கும், ஒரு பவுன் ரூ.72 ஆயிரத்து 560-க்கும் விற்பனை செய்யப்பட்டது. 

நேற்று ஆபரண தங்கம் விலையில் மாற்றமின்றி, ஒரு சவரன் ரூ.72,560க்கும், ஒரு கிராம் ரூ.9,070க்கும் விற்பனை செய்யப்பட்டது. மேலும் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் ரூ.120-க்கும், ஒரு கிலோ ஒரு லட்சத்து 20 ஆயிரத்துக்கும் விற்பனையானது.

இந்நிலையில் ஆபரண தங்கம் விலை இன்று சற்று குறைந்துள்ளது. இதன்படி ஒரு கிராம் ரூ.85-ம், ஒரு பவுன் ரூ.680-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 985-க்கும், ஒரு பவுன் ரூ.71 ஆயிரத்து 880-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் 120 ரூபாய்க்கும், ஒரு கிலோ ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தின் விலை குறைந்து வருவது பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Read Entire Article