வங்காளதேசத்திற்கு எதிரான டெஸ்ட்: வலுவான நிலையில் தென் ஆப்பிரிக்கா

2 months ago 14

சிட்டோகிராம்,

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட்டில் தென் ஆப்பிரிக்கா வெற்றிபெற்ற நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 2வது டெஸ்ட் சிட்டோகிராம் நேற்று தொடங்கியது.

இதில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 575 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இதையடுத்து களமிறங்கிய வங்காளதேசம் 2ம் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 38 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. இதன் மூலம் வங்காளதேசத்தை விட 537 ரன்கள் முன்னிலையில் தென் ஆப்பிரிக்கா வலுவாக உள்ளது. அதிக ரன்கள் முன்னிலையில் வலுவாக உள்ள தென் ஆப்பிரிக்கா 2வது டெஸ்ட்டிலும் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read Entire Article