வங்காளதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடர்; டெம்பா பவுமா விலகல்

3 months ago 21

கேப்டவுன்,

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வரும் அக்டோபர் 21-ம் தேதி டக்காவில் தொடங்க உள்ளது. இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு உட்பட்டது என்பதால் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்நிலையில் இந்த தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. இந்த அணிக்கு டெம்பா பவுமா கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், வங்காளதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து தென் ஆப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமா விலகி உள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இடது கையில் ஏற்பட்ட காயம் காரணமாக முதல் போட்டியில் அவர் இடம் பெற மாட்டார் என தெரிவிக்கப்பட்ட்டது. அவருக்கு பதிலாக எய்டன் மார்க்ரம் கேப்டனாக செயல்படுவார் எனவும், இளம் வீரரான டெவால்ட் பிரேவிஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், இடும்பு பகுதியில் உள்ள எலும்பு பிரச்சனையால் தொடரில் இருந்து விலகிய நந்த்ரே பர்கருக்கு பதிலாக லுங்கி என்கிடி அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென் ஆப்பிரிக்க அணி விவரம் பின்வருமாறு:-

எய்டன் மார்க்ரன் (கேப்டன்), டேவிட் பெடிங்ஹாம், மேத்யூ ப்ரீட்ஸ்கே, லுங்கி என்கிடி, டோனி டி ஜோர்ஜி, கேசவ் மகராஜ், டெவால்ட் பிரெவிஸ், வியான் முல்டர்,செனுரன் முத்துசாமி, டேன் பேட்டர்சன், டேன் பீட், ககிசோ ரபாடா, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ரியான் ரிக்கல்டன், கைல் வெர்ரைன்.


The Proteas Men are heading to Bangladesh!

Proteas Men's Test captain Temba Bavuma has been ruled out of the first Test against Bangladesh after scans revealed a left tricep muscle strain. He will travel with the squad to Dhaka on Tuesday and continue his recovery under the… pic.twitter.com/62eovxMkQ2

— Proteas Men (@ProteasMenCSA) October 11, 2024

Read Entire Article