கேன்ஸ் திரைப்பட விழாவில் கவனம் ஈர்த்த ஊர்வசி ரவுத்தேலா

4 hours ago 2

மும்பை,

கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கிய கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா வருகிற 24-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதன் முதல் நாளில் பிரபலங்களை வரவேற்கும் வகையில் சிவப்பு கம்பள நிகழ்ச்சி நடந்தது.

இதில் ஹாலிவுட் ஜாம்பவான்கள் குவின்டின் டொரன்டினோ, ராபர்ட் டி நிரோ உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது நடிகர் ராபர்ட் டி நிரோவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

இது ஒருபுறம் இருக்க, சிவப்பு கம்பள நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தேலா விதவிதமான வண்ணங்களில் ஒரு ஸ்டைல் லுக்கில் கையில் பறவையை பிடித்திருந்த மாதிரி போஸ் கொடுத்தார். இது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

Read Entire Article