
ஹராரே,
ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் வரும் 20ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரின் ஆட்டங்கள் முறையே சில்ஹெட் மற்றும் சட்டோகிராமில் நடக்கிறது.
இந்நிலையில், இந்த டெஸ்ட் தொடருக்கான ஜிம்பாப்வே அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு கிரேக் எர்வின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அணியில் சீனியர் வீரரான சீன் வில்லியம்ஸ் இடம் பிடித்துள்ளார்.
ஜிம்பாப்வே அணி விவரம்:
கிரேக் எர்வின் (கேப்டன்), பிரைன் பென்னட், ஜோனதான் கேம்ப்பெல், பென் கர்ரன், டிரெவர் க்வாண்டு, வெஸ்லி மாதவரே, வெல்லிங்டன் மசகட்சா, வின்செண்ட் மசெகேசா, நியாஷா மாயவோ, பிளெஸ்சிங் முசரபானி, ரிச்சர்ட் ங்க்வாரா, விக்டர் நியாசி, தபத்ஸ்வா சிகா, நிக்கோலஸ் வெல்ச், சீன் வில்லியம்ஸ்.
போட்டி அட்டவணை விவரம்:
முதல் டெஸ்ட் போட்டி: ஏப்ரல் 20-24 - சில்ஹெட்
2வது டெஸ்ட் போட்டி: ஏப்ரல் 28 - மே 02 - சட்டோகிராம்