ஜமைக்கா,
வங்காளதேச கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடர் 1-1 என சமனில் முடிந்தது. தொடர்ந்து நடைபெற்ற ஒருநாள் தொடரை 3-0 என வெஸ்ட் இண்டீஸ் அணி முழுமையாக கைப்பற்றியது.
இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான டி20 தொடர் வரும் 15ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில், வங்காளதேசத்திற்கு எதிரான டி20 தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு ரோவ்மன் பவல் கேப்டனாகவும், பிரண்டன் கிங் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வெஸ்ட் இண்டீஸ் அணி விவரம்; ரோவ்மன் பவல் (கேப்டன்), பிரண்டன் கிங் (துணை கேப்டன்), கீசி கார்டி, ஜான்சன் சார்லஸ், ரோஸ்டன் சேஸ், ஜஸ்டின் கீரிவஸ், டெரன்ஸ் ஹிண்ட்ஸ், அல்ஜாரி ஜோசப், எவின் லூயிஸ், ஓபெட் மெக்காய், குடகேஷ் மோடி, நிக்கோலஸ் பூரன், ரொமாரியோ ஷெப்பர்ட், ஷமர் ஸ்பிரிங்கர், அகேல் ஹொசைன் (முதல் இரு போட்டிகளுக்கு மட்டும்), ஜெய்டன் சீல்ஸ் (3வது போட்டிக்கு மட்டும்).