'பார்ப்பதற்குதான் கரடு முரடாக இருப்பார், ஆனால்...' - இயக்குனர் ஆர்.வி.உதயகுமார்

4 hours ago 3

சென்னை,

விஷால் பார்ப்பதற்குதான் கொஞ்சம் கரடு முரடாக இருப்பார். ஆனால், குழந்தைபோல மனது என்று இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் கூறியுள்ளார்.

'பேராண்மை' படத்தில் கல்லூரி மாணவியாக நடித்து தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்த தன்ஷிகா, தற்போது கவுதம் கிருஷ்ணா இயக்கத்தில் 'யோகிடா' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை ஜப்பட்மா சினிமாஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் அருணகிரி மற்றும் ராஜ்குமார் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

பெண்களை மையமாக கொண்டு ஆக்சன் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் நடிகர் விஷால் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

அதில் பேசிய நடிகை சாய் தன்ஷிகா, வருகிற ஆகஸ்ட் மாதம் 29-ந் தேதி விஷாலுக்கும் தனக்கும் திருமணம் நடைபெறும் என்று அறிவித்தார். பின்னர் பேசிய இயக்குனர் ஆர்.வி.உதயகுமார்,

'விஷாலை எனக்கு ரொம்ப பிடிக்கும். மனதில் எதையும் வைக்காமல், என்ன தோன்றுகிறதோ அதை அப்படியே பேசுவார். அவர் நடிகராகும் முன்பே எனக்கு அவரை தெரியும்.

அவருடைய அப்பா எனக்கு நல்ல நண்பர். என்னிடம் நிறைய விஷயங்களை பேசுவார். விஷால் பார்ப்பதற்குதான் கொஞ்சம் கரடு முரடாக இருப்பார். ஆனால், குழந்தைபோல மனது. இந்த குழந்தையை நல்லா பார்த்துக்கொள்ளுங்கள் தன்ஷிகா' என்றார்.

Read Entire Article