வங்காளதேசத்திற்கு எதிரான டி20 தொடர்; சிறந்த பீல்டர் விருது வென்ற வாஷிங்டன் சுந்தர்

1 month ago 7

ஐதராபாத்,

வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடியது. இந்த தொடரை 3-0 என்ற கணக்கில் இந்தியா முழுமையாக கைப்பற்றியது.

இந்திய கிரிக்கெட் வாரியம் (பி.சி.சி.ஐ) ஒவ்வொரு தொடரின் முடிவிலும், அந்த தொடரில் சிறப்பாக பீல்டிங் செய்யும் வீரருக்கு விருது வழங்கி கவுரவித்து வருகிறது. அந்தவகையில், வங்காளதேசத்திற்கு எதிரான டி20 தொடரில் சிறந்த பீல்டர் விருது தமிழக ஆல்ரவுண்டரான வாஷிங்டன் சுந்தருக்கு வழங்கப்பட்டது.

விருது பெற்றது குறித்து வாஷிங்டன் சுந்தர் கூறும்போது, இந்திய அணியின் பீல்டிங் பயிற்சியாளர் திலீப் மற்றும் பயிற்சிக் குழுவில் உள்ள அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பீல்டிங்கில் என்னுடைய 100 சதவீத திறமையை வெளிக்கொண்டு வர முயற்சி செய்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.


| | #INDvBAN

The series where intent matched energy

The Fielding goes to..

WATCH - By @RajalArora | #TeamIndia | @IDFCFIRSTBank

— BCCI (@BCCI) October 13, 2024

Read Entire Article