
லண்டன்,
'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. இந்த தொடரில் பல முன்னணி வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற ரவுண்ட் ஆப் 16 சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரர்களான கார்லஸ் அல்கார்ஸ் (ஸ்பெயின்), ஆண்ட்ரே ரூப்லெப் (ரஷியா) ஆகியோர் மோதினர்.
இந்த போட்டியில் தொடக்கம் முதலே அபாரமாக செயல்பட்ட அல்காரஸ் 6-7 (5-7), 6-3, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் ஆண்ட்ரே ரூப்லெவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். தோல்வி கண்ட ரூப்லெவ் தொடரில் இருந்து வெளியேறினார்.