வங்காளதேச தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து சந்திக ஹதுருசிங்க இடைநீக்கம்

3 months ago 20

டாக்கா,

வங்காளதேச கிரிக்கெட் அணி சமீபத்தில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடியது. இந்த இரு தொடர்களையும் (2-0, 3-0) இந்திய அணி முழுமையாக கைப்பற்றி அசத்தியது.

இந்த தொடர் தொடங்குவதற்கு முன்னர் இந்திய அணியை வீழ்த்துவோம் என வங்காளதேச அணியினர் கூறி வந்தனர். ஆனால், அதற்கு மாறாக ஒரு போட்டியில் கூட வெற்றி பெறாமல் வங்காளதேச அணியினர் சொந்த நாட்டுக்கு திரும்பினர்.

இந்நிலையில், வங்காளதேச அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வந்த சந்திக ஹதுருசிங்க இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவுக்கு எதிரான மோசமான செயல்பாடு காரணமாகவும், கடந்த 2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் போது ஒரு வீரரை அறைந்த காரணத்திற்காகவும் சந்திக ஹதுருசிங்க இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அவருக்கு பதிலாக வெஸ்ட் இண்டீசை சேர்ந்த முன்னாள் வீரர் பில் சிம்மன்ஸ் வங்காளதேச அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக செயல்பட உள்ளதாகவும், அவர் சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரை தலைமை பயிற்சியாளராக செயல்படுவார் எனவும் கூறப்படுகிறது.

Read Entire Article