வங்கதேசம்: வன்முறையால் 1,400-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்- ஐநா அறிக்கை

3 months ago 12

ஜெனீவா,

வங்கதேசத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் மாணவர்களின் போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. இதையடுத்து அந்நாட்டின் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் அடைக்கலம் புகுந்தார். இதற்கிடையே, மாணவர்கள் நடத்திய போராட்டங்களின்போது நிகழ்ந்த வெவ்வேறு வன்முறை சம்பவங்களில், அதிலும் குறிப்பாக ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 5 வரையிலான மூன்றே வாரங்களில் மட்டும், உயிரிழந்தோர் எண்ணிக்கை சுமார் 1,400-ஐ தாண்டும் என்று ஐ. நா. மனித உரிமைகள் அலுவலகம் தெரிவித்துள்ளது. .

அந்நாட்டின் பாதுகாப்புப் படைகள் மனித உரிமைகள் மீறலில் ஈடுபட்டதாகவும், போராட்டக்காரர்களை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றதாகவும் ஐ. நா. தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன் காரணமாக போராட்டங்களின்போது மனித உரிமை மீறல் குற்றங்கள் அதிகளவில் நடந்ததாகவும், இது குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டுமென்றும் ஐ. நா. கூறியுள்ளது. வங்கதேசத்தில் ஆட்சி மாறியிருந்தாலும் நிர்வாக அமைப்பில் மாற்றங்கள் ஏற்படவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது

Read Entire Article