வங்கதேசத்துடன் 2வது டி20 இந்தியா அபார வெற்றி

2 hours ago 2

புதுடெல்லி, அக். 10: வங்கதேச அணியுடனான 2வது டி20 போட்டியில், 86 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற இந்தியா 2-0 என முன்னிலை பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றியது. அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பந்துவீசியது. சாம்சன் 10, அபிஷேக் 15, கேப்டன் சூர்யகுமார் 8 ரன்னில் பெவிலியன் திரும்ப, இந்தியா41 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து தடுமாறியது.

இந்த நிலையில், நிதிஷ் குமார் ரெட்டி – ரிங்கு சிங் இணைந்து அதிரடியில் இறங்கினர். இருவரும் 4வது விக்கெட்டுக்கு 108 ரன் சேர்த்தனர். நிதிஷ் குமார் 74 ரன் (34 பந்து, 4 பவுண்டரி, 7 சிக்சர்) விளாசி முஸ்டாபிசுர் வேகத்தில் மிராஸ் வசம் பிடிபட்டார். ரிங்கு சிங் 53 ரன் (29 பந்து, 5 பவுண்டரி, 3 சிக்சர்), ஹர்திக் பாண்டியா 32 ரன் (19 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்), ரியான் பராக் 15 ரன் (6 பந்து, 2 சிக்சர்), வருண் (0), அர்ஷ்தீப் 6 ரன்னில் அவுட்டாகினர். இந்தியா 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 221 ரன் குவித்தது. வங்கதேச பந்துவீச்சில் ரிஷத் 3, தஸ்கின், தன்ஸிம், முஸ்டாபிசுர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

அடுத்து களமிறங்கிய வங்கதேசம் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 135 ரன் மட்டுமே எடுத்து 86 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. அதிகபட்சமாக மஹ்மதுல்லா 41 ரன், மெஹ்டி ஹசன் 16 ரன் எடுத்தனர். இந்திய தரப்பில் நிதிஷ் ரெட்டி, வருண் சக்கரவர்த்தி தலா 2 விக்கெட், அர்ஷ்தீப், வாஷிங்டன் சுந்தர், அபிஷேக், மயங்க் யாதவ், ரியான் பராக் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இந்தியா 2-0 என முன்னிலை பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றிய நிலையில், கடைசி போட்டி ஐதராபாத்தில் நாளை மறுநாள் நடக்கிறது.

The post வங்கதேசத்துடன் 2வது டி20 இந்தியா அபார வெற்றி appeared first on Dinakaran.

Read Entire Article