வங்கதேசம்: சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் லீக் சுற்றில் ஒரு வெற்றியை கூட பெறாமல் வங்கதேச அணி தொடரில் இருந்து வெளியேறியது. இந்த சூழலில் வங்கதேச கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பராக செயல்பட்ட மூத்த வீரர் முஷ்பிகுர் ரஹீம் (37) ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து உள்ளார்.
வங்கதேச அணிக்காக இதுவரை 274 போட்டிகளில் விளையாடி 7,795 ரன்களை முஷ்பிகுர் ரஹீம் எடுத்து உள்ளார். இதில் 9 சதம், 49 அரை சதம் அடங்கும். ஓய்வு குறித்து முஷ்பிகுர் ரஹீம் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள பதிவில், ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவது என்ற முடிவை எடுத்துள்ளேன். எல்லாவற்றுக்கும் கடவுளுக்கு நன்றி’ என்று கூறி உள்ளார்.
The post வங்கதேச வீரர் முஷ்பிகுர் ரஹீம் ஓய்வு appeared first on Dinakaran.