சென்னை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக ஆழ்கடல் பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான ஏல அறிவிப்பை ஒன்றிய அரசு வெளியிட்டிருந்தது. ஒன்றிய அரசின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகமானது திறந்தவெளி அனுமதி கொள்கை எனும் ஹைட்ரோ கார்பன் எடுப்புக் கொள்கையின் கீழான 10வது சுற்று ஏல அறிவிப்பில் தென் தமிழக ஆழ்கடலின் 9990.96 சதுர கிலோமீட்டர் பரப்பிலான வட்டாரமும் இடம் பெற்றுள்ளது.
தொடர்ச்சியாக நடைபெற்று வரும் திறந்தவெளி அனுமதி கொள்கை அடிப்படையில் ஏல ஒப்பந்தத்தில் இந்த கடற்பகுதிகளை ஒன்றிய அரசு வேதாந்தா மற்றும் ஓ.என்.ஜி.சி. உள்ளிட்ட நிறுவங்களுக்கு வழங்கி வருகிறது. இது கடல்வாழ் உயிரினங்களையும் மீன்பிடிப் பொருளாதாரத்தையும் மீனவர்கள் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும். எனவே ஒன்றிய அரசு தமிழ்நாட்டில் ஆழ்கடலில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்.
The post தமிழ்நாட்டின் ஆழ்கடல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு திட்டத்தை கைவிட வேண்டும்: வைகோ வலியுறுத்தல் appeared first on Dinakaran.