சென்னை,
தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் நாளை காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் நாளை காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளது. காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுவடையக்கூடும். ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வட தமிழகம், புதுச்சேரி, ஆந்திர கடலோரப்பகுதியை நோக்கி நகரும்.
5 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு
தஞ்சாவூர், திருவாரூர், மதுரை, தேனி, விருதுநகரில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது.
16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
தருமபுரி, சேலம், ஈரோடு, நீலகிரி, நாமக்கல், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கரூர், திருப்பூர், கோவை, திண்டுக்கல், புதுக்கோட்டை, நாகை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
9 மாவட்டங்களில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு
விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகை மற்றும் புதுக்கோட்டையில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னை வானிலை நிலவரம்
சென்னையில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளது.
இதன்படி சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளது.
15-ம் தேதி சென்னையில் மிக கனமழைக்கு வாய்ப்பு
சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் வரும் 15-ம் தேதி மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. இதன்படி திருவள்ளுர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் கடலூரில் 15-ம் தேதி மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது.
மேலும் 15-ம் தேதி வேலூர், திருப்பத்தூர், தருமபுரி, மாவட்டகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
ரெட் அலர்ட்
வரும் 16-ம் தேதி சென்னைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு அதி கனமழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் மிக கனமழையும், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
வரும் 17-ம் தேதி சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம், தருமபுரி, சேலம், ஈரோடு, திருவண்ணாமலையி மிக கனமழைக்கு வாய்ப்பு ள்ளது.
வரும் 18 மற்றும் 19ம் தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன், "காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகத்தில் வரும் 5 நாட்களுக்கு மழை தொடரும். சென்னையில் இன்று முதல் மழை படிப்படியாக அதிகரிக்கக்கூடும். புதுச்சேரி, கடலூர் பகுதிகளிலும் 5 நாட்களுக்கு மழை தொடரும். தஞ்சாவூர், திருவாரூர், மதுரை, தேனி, விருதுநகரில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. வரும் 15 மற்றும் 16-ம் தேதியில் சென்னைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது
அரபிக்கடல் மற்றும் வங்கக்கடலில் உள்ள 2 நிகழ்வுகளால் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது" என்று அவர் கூறினார்.