சென்னை: தெற்கு அந்தமான் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நாளை ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக 23ம் தேதியில் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளிலும் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் வாய்ப்புள்ளது. அது, மேற்கு- வட மேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 2 நாட்களில் தென் மேற்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிகழ்வுகளின் காரணமாக இன்று முதல் 24ம் தேதி வரை தமிழகம் புதுச்சேரியில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. 25ம் தேதி கடலூர், மயிலாடுதுறை, நகாப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். சென்னையில் இன்று பொதுவாக வானம் மேகமூட்டமாக காணப்படும். அதிகாலை வேளையில் பனி மூட்டமாக காணப்படும். சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கும் வாய்ப்புள்ளது.
The post வங்கக்கடலில் 23ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு உருவாகிறது appeared first on Dinakaran.