மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நேற்று நடந்த ஆங்கிலிக்கன் திருச்சபை பிஷப்கள் மாநாட்டில் ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் இந்திரேஷ் குமார் பேசியதாவது: பாகிஸ்தானுக்கு என்ன நடக்கும் என்று எங்களுக்குத் தெரியாது. ஆனால் அந்த நாடு ஐந்து பகுதிகளாக உடைந்து சிதறும் என்று மக்கள் கூறுகிறார்கள். பாகிஸ்தான் உருவானதில் இருந்தே வன்முறையும் ரத்தக்களரியும் நடந்து வருவதாக சிலர் கூறுகிறார்கள். பாகிஸ்தானுக்கு இப்போது 80 வயதாகிவிட்டது. அந்த நாட்டின் காலம் முடிந்துவிட்டது என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.
பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள ஜம்மு-காஷ்மீர் இந்தியாவுடன் இணைய விரும்புகிறது. சிந்து, பலுசிஸ்தான், பஷ்டூன் பகுதி மற்றும் பாகிஸ்தானின் பஞ்சாப் ஆகியவை நாட்டிலிருந்து சுதந்திரம் வேண்டும் என பாகிஸ்தானுக்குள் இருந்து குரல்கள் எழுகின்றன. இந்திய மக்கள் இந்த தாக்குதலுக்காக பொறுமையாக காத்திருந்தனர். இந்த தாக்குதலினால் மக்கள் மகிழ்ச்சியடைகிறார்கள். ராணுவத்தை வணங்குகிறோம் என்றார்.
The post ‘பாகிஸ்தான் 5 துண்டுகளாக உடையும்’ appeared first on Dinakaran.